துல்கர் படங்களை புறக்கணிக்க தியேட்டர் அதிபர்கள் முடிவு

ஓடிடி-யில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு
துல்கர் படங்களை புறக்கணிக்க தியேட்டர் அதிபர்கள் முடிவு
சல்யூட் - துல்கர் சல்மான்

’சல்யூட்’ படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதால், துல்கர் சல்மான் படங்களை புறக்கணிக்க கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

துல்கர் சல்மான் தயாரித்து, நடித்துள்ள மலையாளப் படம் ‘சல்யூட்’. இந்தி நடிகை டயா பெண்டி நாயகியாக நடித்திருக்கிறார். மனோஜ் கே.ஜெயன், லட்சுமி கோபாலசாமி, சாய்குமார், விஜய்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் துல்கர் சல்மான் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்தப் படம் பொங்கலையொட்டி தியேட்டர்களில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கரோனா பரவல் அதிமானதால் தேதி தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதை துல்கர் சல்மான் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்தார்.

இந்நிலையில், தியேட்டர்களுக்கு படத்தைத் தருவதாகச் சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் ஓடிடியில் வெளியிடுவதாக அறிவித்த துல்கர் சல்மானுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் அவர் படங்களுக்குத் தடை விதிக்கவும் கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளது.

கொச்சியில் நேற்று நடந்த இந்தச் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி பொதுக்குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.