ராம் கோபால் வர்மா படத்துக்கு வந்த சிக்கல்: காரணம் இதுதான்?

ராம் கோபால் வர்மா படத்துக்கு வந்த சிக்கல்: காரணம் இதுதான்?

‘டேஞ்சரஸ் உமன்’ படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்துவிட்டால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக ராம் கோபால் வர்மா அறிவித்துள்ளார்.

சர்ச்சை இயக்குநர் என விமர்சிக்கப்பட்டு வரும் ராம் கோபால் வர்மா, காட் செக்ஸ் ட்ரூத், கிளைமேக்ஸ், நேக்கட் என பல படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படங்களில் அதிக அளவிலான ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருந்தன. தற்போது, ‘டேஞ்சரஸ் உமன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் ராம் கோபால் வர்மா. இந்தப் படத்தில் எல்லை மீறிய ஆபாச காட்சிகள் இருப்பதாக கூறி படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்திய சினிமாவில் யூகிக்க முடியாத அளவிற்கு திரைப்படங்களை இயக்கி ரசிகர்களை அதிர வைத்தவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவர் இயக்கிய சத்யா, சர்க்கார், சர்க்கார் ராஜ், கம்பெனி உள்ளிட்ட திரைப்படங்கள் இந்திய சினிமாவையே மிரட்டின.

அந்த வரிசையில் ‘டேஞ்சரஸ் உமன்’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நைனா கங்குலி மற்றும் அப்ஸரா ராணி என்ற இரு அழகிகள் லெஸ்பியனாக நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மூன்று மொழிகளில் தயாரான இப்படத்திற்காக கடந்த சில நாட்களாக சென்னை, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் க்ரைம் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படத்தை மூன்று மொழிகளில் உள்ள திரையங்க உரிமையாளர்கள் வெளியிட மறுப்பு தெரிவித்துவிட்டால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக ராம் கோபால் வர்மா அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.