`தைரியங்கறது தேடி வந்தவனை அடிக்கிறதில்ல, தேடிப் போய் அடிக்கிறது’- மிரட்டும் `தி வாரியர்’ டீஸர்

`தைரியங்கறது தேடி வந்தவனை அடிக்கிறதில்ல, தேடிப் போய் அடிக்கிறது’- மிரட்டும் `தி வாரியர்’ டீஸர்

’தைரியங்கறது தேடி வந்தவனை அடிக்கிறதில்ல, தேடிப் போய் அடிக்கிறது’ என்று மிரட்டும் ஆக்‌ஷன் அதகளத்தோடு வெளியாகி இருக்கிறது, ’தி வாரியர்’ படத்தின் டீஸர்.

இயக்குநர் லிங்குசாமி, ’தி வாரியர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில், தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி ஹீரோயின். நடிகர் ஆதி, வில்லனாக நடிக்கிறார். அக்‌ஷரா கவுடா, நதியா, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி - பவன் குமார் தயாரிக்கின்றனர். ஜூலை 14-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியானது.

நடிகர் ஆதி
நடிகர் ஆதி

சத்யா என்ற போலீஸ் அதிகாரியாக ராம் நடித்திருக்கிறார். தைரியமான போலீஸ் அதிகாரியான அவர், ஹீரோ ரவுடிகளை நையப் புடைப்பதும், ’பான் இந்தியா படம் பார்த்திருப்ப, பான் இந்தியா ரவுடிகளை பார்த்திருக்கியா?’ என்று ரவுடி கேட்பதும், வில்லனாக நடித்திருக்கும் ஆதி, ’ஆட்டம் நல்லாதான் இருக்கு, ஆடிரலாம்’ என்று வீராப்புக் காட்டுவதுமாக டீஸர் மிரட்டுகிறது.

நதியா, ’தைரியங்கறது தேடி வந்தவனை அடிக்கறதில்ல, தேடிப் போய் அடிக்கிறது’ என்கிறார் ஹீரோவிடம். இதனால் படத்தில் ஆக்‌ஷன் அதிரடி அதிகமாக இருக்கும்போல் தோன்றுகிறது. இந்த டீஸர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in