மிரட்டும் `தி வாரியர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

நடிகர் ஆதி
நடிகர் ஆதி

நடிகர் ஆதி வில்லன் ரோலில் நடித்துள்ள `தி வாரியர்' திரைப்படத்தில் மிரட்டும் கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

நடிகர் ராம் பொதியேனி நடித்திருக்கும் `தி வாரியர்' படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் முதன்முறையாக பிரபல இயக்குநர் லிங்குசாமியுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படம், இருமொழிகளில் தயாராவதுடன், தமிழ் திரையுலகில் ராம் அறிமுகமாகும் முதல் படமாகும். இப்படத்தில் நடிகர் ஆதி பினுஷெட்டி இதுவரை பார்த்திராத வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மகா சிவராத்திரி நேற்று அன்று, `தி வாரியர்' படத்தின் குழுவினர் ஆதியின் ஃபர்ஸ்ட் லுக் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் ஆதி, குரு என்ற கதாபாத்திரத்தில் தீய செயல்களுக்கே தலைவனாக இருக்கும் ஒரு மிரட்டலான பாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கடுமையான தோற்றம் மற்றும் மிரட்டும் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும், அக்‌ஷரா கவுடா ஒரு முக்கிய பாத்திரத்திலும் நடிக்கின்றனர். சீனிவாசா சில்வர் கிரின் நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி மிக பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் `தி வாரிய' படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in