`நான் ஒரு முட்டாள்’- ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து வெளியேறிய பின் சதீஷ் வெளியிட்ட வீடியோ!

’கோபி’ சதீஷ்
’கோபி’ சதீஷ்`நான் ஒரு முட்டாள்’- ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து வெளியேறிய பின் சதீஷ் வெளியிட்ட வீடியோ!

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து வெளியேறிய பிறகு சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து நடிகர் ‘கோபி’ சதீஷ் தனிப்பட்ட காரணங்களால் வெளியேற இருப்பதாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து அவர் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் பேசியிருப்பதாவது, ‘எல்லாருக்கும் வணக்கம்! வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் வந்தாலே கஷ்டம். ஏனெனில் அவை எல்லாமே ஏமாற்றத்தில்தான் முடியும். நேற்று வரை நான் நிறைய படித்த மேதாவி, புத்திசாலி, உலகத்தை மாற்றி விடலாம் என்று நினைத்தேன். ஆனால், அப்படி இல்லை! நான் ஒரு முட்டாள். அதை நான் தெரிந்து கொண்டேன். இப்போது நான் அறிவாளி. என்னையே நான் தெரிந்து கொண்டு மாற்றியுள்ளேன். உலகத்தை மாற்ற முடியாது. ஆனால், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். மாற்றிக் கொள்ள முடியும். முயற்சியே திருவினை!’ என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

இதற்கு முன்பு ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிஃபர் தன் கதாபாத்திரம் வேறு மாறி இனிவரும் காலங்களில் மாற இருப்பதால் நடிக்க விருப்பமில்லை என்று தெரிவித்து விலகினார். அதுபோன்ற காரணத்தால்தான் கோபியும் விலகினாரா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in