`வழக்கமான சந்தானம் இதில் இருக்க மாட்டார்'- மனம் திறந்த `ஏஜென்ட் கண்ணாயிரம்' பட இயக்குநர்!

`வழக்கமான சந்தானம் இதில் இருக்க மாட்டார்'- மனம் திறந்த `ஏஜென்ட் கண்ணாயிரம்' பட இயக்குநர்!

’ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தில் நடிகர் சந்தானம் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் மனோஜ் பீதா மனம் திறந்துள்ளார்.

வஞ்சகர் உலகம்’ படத்தை இயக்கிய மனோஜ் பீதா, அடுத்து தமிழில் இயக்கி இருக்கக்கூடிய படம், ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’. இது  டோலிவுட்டில் வெற்றி பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற படத்தின் ரீமேக். அந்தப் படம் தெலுங்கில் 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 20 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதன் தமிழ் ரீமேக்கில் சந்தானம் நாயகனாகவும் ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், முனிஷ்காந்த் உள்பட பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் குறித்து மனோஜ் பீதா கூறும்போது, “இது தெலுங்கு படத்தின் ரீமேக் என்றாலும் தமிழுக்காக சில மாற்றங்கள் செய்துள்ளோம். சந்தானம் படத்தில் வழக்கமாக இருக்கும் விஷயங்கள் இதில் அதிகம் இருக்காது. அதனாலேயே இதுவரைப் பார்க்காத சந்தானத்தை நடிகராக இதில் பார்க்கலாம். ஒரு பிரச்சினையை துப்பறியும் கதையை கொண்ட படம் இது. தாய்- மகன் பாசப்பிணைப்பையும் சொல்லி இருக்கிறோம். வரும் 25-ம் தேதி படம் வெளியாக இருக்கிறது” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in