நடிகர் அஜித் செட் செய்த ட்ரெண்ட்: மனம் திறந்து பாராட்டிய இயக்குநர் ராஜமௌலி

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி

நடிகர் அஜித்தான் இந்த ட்ரெண்டை செட் செய்துள்ளார் என்று இயக்குநர் ராஜமெளலி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ராஜமெளலி. தற்போது இவருடைய ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் கோல்டன் குளோப் விருதுகள் பட்டியலில் நாமினேட் ஆகியிருக்கிறது என்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதேபோல, திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் ராஜமெளலிக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குநர் ராஜமெளலி, நடிகர் அஜித் சினிமாவில் ஆரம்பித்து வைத்துள்ள ட்ரெண்ட் குறித்து மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

"சினிமாவில் ஹீரோக்கள் என்றாலே, ஹேண்ட்சமாக இருக்க வேண்டும். ரசிகர்களுக்கு பிடித்தபடியான தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பது போன்ற போலியான கட்டமைப்புகள் ஒரு கட்டம் வரை இருந்தது. அதை எல்லாம் உடைத்து கதாநாயகர்கள் வெள்ளைமுடியுடனும் நடிக்கலாம் என்ற ட்ரெண்டைத் தொடங்கி வைத்தவர் நடிகர் அஜித்தான்" எனத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு விஷயம்தான் அஜித் ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ‘துணிவு’ படத்தின் ‘சில்லா சில்லா’ பாடல் ஜிப்ரான் இசையில் அனிருத் குரலில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. படத்தின் அடுத்தப் பாடலான ‘காசேதான் கடவுளடா’ விரைவில் வெளியாகும் என ஜிப்ரான் ட்விட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in