பிக்பாஸ் கவின் நடிக்கும் படத்துக்கு ஜில்லான தலைப்பு!

டாடா - பிக் பாஸ் கவின்
டாடா - பிக் பாஸ் கவின்

பிக்பாஸ் கவின் நடிக்கும் படத்தின் தலைப்பும் பர்ஸ்ட் லுக்கும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத்குமார் தயாரிக்கும் படத்தை கணேஷ் கே பாபு இயக்குகிறார். இந்தப் படத்தில் பிக் பாஸ் கவின், அபர்ணா தாஸ் ஜோடியாக நடிக்கின்றனர். காதல் கதையான இந்தப் படத்தில் கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ புகழ் ஹரிஷ், வாழ் புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். எழில் அரசு.கே ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார்.

அபர்ணா தாஸ்
அபர்ணா தாஸ்

இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பு இன்று வெளியிடப்பட்டது. படத்துக்கு டாடா என்று ஜில்லான தலைப்பு வைத்துள்ளனர்.

இயக்குநர் கணேஷ் கே பாபு கூறும்போது, ``எல்லோருக்கும் பரிச்சயமானது என்பதால் டாடா என்ற தலைப்பை படத்துக்கு வைத்தோம். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த வார்த்தையை குறிப்பிட்டிருப்பார்கள், அல்லது கேட்டிருப்பார்கள். தவிர, படத்தில் இந்தத் தலைப்புக்கு நிறைய முக்கியத்துவம் உள்ளது. திரைக்கதைக்கு பொருத்தமானதாகவும் இந்தத் தலைப்பு இருக்கும். இரண்டாவது ஷெட்யூல் விரைவில் தொடங்கவுள்ளது’ என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in