`வாரிசு’ படத்தின் 3-வது பாடல் நாளை வெளியீடு: எகிற வைக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு

`வாரிசு’ படத்தின் 3-வது பாடல் நாளை வெளியீடு: எகிற வைக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு

‘வாரிசு’ படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகிறது!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. நடிகர்கள் ராஷ்மிகா மந்தானா, ஷ்யாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’ ஆகிய பாடல்கள் வெளியாகி இருக்கக்கூடிய நிலையில் மூன்றாவது பாடலாக அம்மா பாடல் #SoulOfVarisu என்ற டேக்குடன் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.

இந்த பாடலை பின்னணி பாடகி சித்ரா பாடியிருக்க விவேக் வரிகள் எழுதி இருக்கிறார். ‘இது உங்களுக்காக அம்மா’ என்ற ஆங்கில வரியுடன் விஜய்யின் புது போஸ்டரை இந்த பாடல் அறிவிப்புடன் வெளியிட்டிருக்கிறது படக்குழு. படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் 24-ம் தேதி நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in