`எம்ஜிஆர் நடிக்க வேண்டிய படம் இது'- பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் மணிரத்னம் சொன்ன சீக்ரெட்

`எம்ஜிஆர் நடிக்க வேண்டிய படம் இது'- பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் மணிரத்னம் சொன்ன சீக்ரெட்

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் டீசர் இன்று வெளியானது. ``இந்த படம் எம்ஜிஆர் நடிக்க வேண்டிய படம்" என்று இயக்குநர் மணிரத்னம் சீக்ரெட் தகவலை சொன்னார்.

கல்கியின் புகழ்பெற்ற 'பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக்கி இருக்கிறார். இதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உள்பட பலர் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

நந்தினி கதாப்பாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயும், வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் கார்த்தியும், அருண்மொழி வர்மன் கதாப்பாத்திரத்தில் ஜெயம்ரவியும், குந்தவை கதாப்பாத்திரத்தில் த்ரிஷாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின டீசர் இன்று வெளியானது. இந்த விழாவில் மணிரத்னம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்பட முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய மணிரத்னம், "இந்த படம் மக்கள் திலகம் எம்ஜிஆர் செய்திருக்க வேண்டிய படம். நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு அவர் நடித்திருக்க வேண்டிய படம். ஏதோ ஒரு காரணத்தால் நின்றுவிட்டது. ஆனால் இன்றைக்குதான் புரிந்தது. எங்களுக்காக விட்டுவெச்சுட்டு போயிருக்கிறார் என்று" என பேசினார்.

நடிகர் கார்த்தி பேசுகையில், "நாம வரலாறு படிக்காம வரலாறு படைக்க முடியாது. அடுத்த தலைமுறைக்கு மணி சார் கொடுக்கிற பரிசுதான் இந்த பொன்னியின் செல்வன். இந்த படம் பார்க்கும்போது உங்களுக்கு ஒரு பெருமிதம் வரும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in