‘கைதி 2’-ம் பாகத்தின் கதை பத்து மடங்கு பெரிதாக இருக்கும்: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

‘கைதி 2’-ம் பாகத்தின் கதை பத்து மடங்கு பெரிதாக இருக்கும்: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

'கைதி' படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் கதை நிச்சயம் பத்து மடங்கு பெரிதாக இருக்கும் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜின் 'விக்ரம்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. படத்தில் கார்த்தியின் 'கைதி', கமலின் பழைய 'விக்ரம்' அதை இப்போது புதிய 'விக்ரம்' கதையில் இணைத்தது என ரசிகர்களுக்கு இந்த படம் புதுவித அனுபவத்தைக் கொடுத்தது. மேலும் இந்த படம் வெளியானதில் இருந்து 'கைதி 2' எப்போது ஆரம்பிக்கும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

இதற்கு 'கைதி' படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர். பிரபு பதிலளித்துள்ளார். " 'விக்ரம்' படம் வெளியானதில் இருந்து 'கைதி 2' மீது ரசிகர்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது தெரியும். உடனே ஆரம்பிக்கலாம் தான். ஆனால், லோகேஷ் கனகராஜ், விஜய் படம் முடித்த பிறகு தான் 'கைதி 2' ஆரம்பிப்பார்.

அதுமட்டுமில்லாமல், கைதி' படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் கதை நிச்சயம் பத்து மடங்கு பெரிதாக இருக்கும். சாம் சி.எஸ். இசையமைப்பாரா என்றால் அதை எல்லாம் இப்போதே முடிவு செய்வது கஷ்டம். படம் ஆரம்பிக்கும் போது தான் அவர்களின் தேதி, மற்ற வேலைகள் பற்றி தெரிய வரும்" என்று கூறினார்.

மேலும்," 'தளபதி 67' படத்தில் கமல் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு உண்டா என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, "அது கதையின் தேவையைப் பொறுத்தது. லோகேஷ் கனகராஜிம், கமல்ஹாசனும் தான் அதை பற்றி முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

மேலும், 'கைதி' படத்திற்காக லோகேஷ் உங்களை அணுகிய போது, அவரின் வளர்ச்சியை கணித்தீர்களா என்ற கேள்விக்கு, "அவர் 'மாநகரம்' படத்தை அப்போது சொன்னபடி இயக்குவாரா என்ற எதிர்பார்ப்பு மட்டும் இருந்தது. அதற்கடுத்து சினிமாவில் அவர் அடுத்தடுத்து எடுத்த முடிவுகள் அனைத்தும் சரியானதாக இருந்தது. Decision Making Skils என்பது சினிமாவில் மிக முக்கியமானது. அது லோகேஷூக்கு சரியான ஒன்றாக அமைந்திருக்கிறது. அவர் இன்னும் அடுத்தடுத்த உயரங்களுக்கு போவார்" என்று தெரிவித்தார்.

மேலும், கடந்த 2019-ல் விஜய்யின் 'பிகில்' படத்தோடு எஸ்.ஆர். பிரபு தயாரித்த 'கைதி' வெளியானது. அதுபோலவே, இந்த வருடம் விஜய்யின் 'பீஸ்ட்' படத்திற்குப் போட்டியாக தமிழகத்தில் எஸ்.ஆர். பிரபு விநியோகித்த 'ஆர்.ஆர்.ஆர்.' படம் வெளியானது. இப்படி விஜய் படத்திற்கு போட்டியாகவே படங்கள் வெளியிடுவது ஏன் என்ற கேள்விக்கு எஸ். ஆர். பிரபு, " அது நாங்கள் வேண்டும் என்றே பார்த்து படங்கள் வெளியிடவில்லை. அது எதேச்சையாக அமைந்தது. போட்டி மனப்பான்மை இல்லை" என தெளிவுபடுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in