விஜயின் கோபத்திற்குக் காரணமான ‘வாரிசு’ பாடல்!

விஜயின் கோபத்திற்குக் காரணமான ‘வாரிசு’ பாடல்!

வாரிசு’ படத்தில் இருந்து லீக்கான பாடலால் நடிகர் விஜய் பயங்கர அப்செட்டாகியுள்ளார்.

வம்சி இயக்கத்தில் தற்போது ‘வாரிசு’ படத்தில் பிஸியாக இருக்கிறார் நடிகர் விஜய். தீபாவளி பண்டிகைக்கு நேற்று புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அடுத்த வருட பொங்கலுக்கு படம் வெளியாகும் என்பதை மீண்டும் உறுதி செய்தது படக்குழு. சென்னை, ஹைதராபாத் என மாறி மாறி நடந்து வந்த படப்பிடிப்பில் ஏற்கனவே படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியானப் புகைப்படங்கள் படக்குழுவை அதிர்ச்சி அடையச் செய்தது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘வாரிசு’ படத்தில் விஜய்யும் ராஷ்மிகாவும் இணைந்து நடனமாடி இருக்கும் ‘ரஞ்சிதமே’ பாட இணையத்தில் லீக்கானதில் நடிகர் விஜய் பயங்கர அப்செட் என்கிறது படக்குழு. இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லீக்கான பாடல் வீடியோ கோணம் மேல் இருந்து எடுக்கப்பட்டு இருப்பதால் லைட்டிங் செட் செய்தவர்கள் தரப்பில் இருந்து வெளியாகி இருக்கலாம் என்ற கணிப்பில் அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. இதுமட்டுமில்லாமல் இனி படப்பிடிப்புத் தளத்திற்கோ அல்லது ‘வாரிசு’ படம் தொடர்பான பணிகளுக்கு வருபவர்களின் செல்போன்களின் கேமராவை ஸ்டிக்கர் கொண்டு மறைத்தப் பிறகே உள்ளே வர வலியுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வாரிசு’ படத்தை முடித்து விட்டு அடுத்து நடிகர் விஜய் தன்னுடைய 67வது படத்திற்காக லோகேஷ் கனகராஜூடன் இணையும் படம் குறித்தான அறிவிப்பு நவம்பரில் வெளியாகி டிசம்பர் மாதம் முதல், படப்பிடிப்புத் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in