கஜகஸ்தான் செல்கிறது நிவின் பாலி, அஞ்சலி டீம்!

கஜகஸ்தான் செல்கிறது நிவின் பாலி, அஞ்சலி டீம்!
நடிகை அஞ்சலி

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடிக்கும் படத்தின் பாடல் காட்சி கஜகஸ்தானில் படமாக்கப்பட இருக்கிறது.

மம்மூட்டி நடித்த 'பேரன்பு' படத்தை அடுத்து ராம் இயக்கும் படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்கிறார். இதில், அஞ்சலி, சூரி உள்பட பலர் நடிக்கின்றனர். ’மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் ‘விஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ்’ இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

அஞ்சலி, நிவின் பாலி, ராம்
அஞ்சலி, நிவின் பாலி, ராம்

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு, ராமேஸ்வரத்தில் நடந்தது. இதில் நிவின் பாலி, அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அடுத்து பெரியகுளம் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. பின்னர், சென்னையில் பிரம்மாண்டமான ரயில்வே ஸ்டேஷன் செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்நிலையில், இந்தப் படத்தின் பாடல் காட்சி, கஜகஸ்தானில் படமாக்கப்பட இருக்கிறது. நிவின் பாலி, அஞ்சலி பங்கேற்கும் இந்தப் பாடல் காட்சியை பிரம்மாண்டமாகப் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக விரைவில் படக்குழு அங்கு செல்ல இருக்கிறது.

Related Stories

No stories found.