`ஸ்வீட் எடு, கொண்டாடு’- மகிழ்ச்சியில் ஹன்சிகா

`ஸ்வீட் எடு, கொண்டாடு’-  மகிழ்ச்சியில் ஹன்சிகா
இனிப்புகளை வழங்குகிறார் ஹன்சிகா

தான் நடித்த வெப்தொடர் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து படக்குழுவினருக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார் நடிகை ஹன்சிகா.

இயக்குநர் ராஜேஷ் எம். இயக்கும் வெப் தொடர், மை3 (MY3). இதில் ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடிக்கிறார். சாந்தனு, பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவ், ஆஷ்னா ஜவேரி, ஜனனி ஐயர் உட்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கணேசன் இசையமைக்கிறார்.

இயக்குநர் ராஜேஷ் எம். ஹன்சிகா
இயக்குநர் ராஜேஷ் எம். ஹன்சிகா

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாருக்காக உருவாகும் இந்த தொடரை, ட்ரெண்ட்லவுட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ``ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பின் இயக்குநர் ராஜேஷூடன் மீண்டும் இணைகிறேன். இந்த தொடர் 100 சதவீதம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். அதே நேரம், இனிமையான அனுபவத்தையும் தரும்'' என்று கூறியிருந்தார் ஹன்சிகா.

இதன் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்தது.

வெப் தொடர் குழுவினருடன் ஹன்சிகா
வெப் தொடர் குழுவினருடன் ஹன்சிகா

இந்நிலையில், படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்துள்ளார் ஹன்சிகா. இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஹன்சிகா, ’இதன் படப்பிடிப்பில் என்னை இளவரசியாக உணர வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி’ தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.