`விடுதலை’ இரண்டு பாகங்களின் படப்பிடிப்பு நிறைவு!

`விடுதலை’ இரண்டு பாகங்களின் படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்டப் பலர் நடித்து வந்த ‘விடுதலை’ படம் குறித்தான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை இயக்குநர் வெற்றிமாறன் படமாக்க, ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

தற்போது 'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 'விடுதலை' பார்ட் 1 படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில் படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஏற்கெனவே அறிவித்தபடி 'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்களும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வழங்குகிறது. விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in