ஒரே இடத்தில் ஷூட்டிங்: விஜய், அஜித் சந்திப்பார்களா?

ஒரே இடத்தில் ஷூட்டிங்: விஜய், அஜித் சந்திப்பார்களா?

விஜய், அஜித் நடிக்கும் படங்களின் ஷூட்டிங், ஹைதராபாத்தில் நடந்து வருவதால் அவர்கள் இருவரும் சந்தித்துப் பேச வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

’பீஸ்ட்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 66-வது படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இவர் கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் உருவான, ’தோழா’ படத்தை இயக்கியவர். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார்.

ஹைதராபாத் விமான நிலையத்தில் விஜய்
ஹைதராபாத் விமான நிலையத்தில் விஜய்

ஃபேமிலி சென்டிமென்ட்டை மையமாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையில் நடந்தது. இதில், சரத்குமார் விஜய்க்குத் தந்தையாக நடிக்கிறார் என்று தெரிகிறது. நடிகர் ஷாம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் அடுத்த ஷெட்யூல் ஹைதராபாத்தில் இன்று தொடங்குகிறது. அங்குள்ள ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் படத்துக்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக நடிகர் விஜய் ஹைதராபாத் சென்றுள்ளார். அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதற்கிடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் அங்கு நடந்து வருகிறது. இந்தப் படத்துக்காகவும் அங்கு பிரம்மாண்ட வங்கி செட்டும் சென்னை மவுண்ட் ரோடு செட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு முன்னணி நடிகர்களின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடப்பதால் அவர்கள் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in