'நக்கலைட்ஸ்' இயக்குநருடன் கைகோத்த நடிகர் மணிகண்டன்... படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு!

மணிகண்டனின் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு
மணிகண்டனின் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

'நக்கலைட்ஸ்' யூடியூப் சேனல் இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதை கேக் வெட்டி படக்குழு கொண்டாடியுள்ளது.

மணிகண்டன்
மணிகண்டன்

‘ஜெய்பீம்’, ‘குட் நைட்’, ‘லவ்வர்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வருகிறார் மணிகண்டன். 'ஜெய்பீம்' படத்தில் பழங்குடி இளைஞராகவும், 'குட்நைட் ' படத்தில் நடுத்தர வர்க்க இளைஞராகவும், 'லவ்வர்' படத்தில் ஆணாதிக்கம் மற்றும் பெண்ணடிமை மனநிலையில் உள்ள தற்கால இளைஞராகவும் இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மணிகண்டன். அழுத்தமான கதைகளில் தொடர்ந்து நடித்து, நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாகவும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறார்.

படத்தின் பூஜையின்போது...
படத்தின் பூஜையின்போது...

இந்நிலையில், 'நக்கலைட்ஸ்' எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார் மணிகண்டன். காமெடி கலந்த குடும்ப பின்னணியில் உருவாகும் படத்திற்கான படப்பிடிப்பு, கடந்தாண்டு டிசம்பர் 18ம் தேதி அன்று பூஜையுடன் தொடங்கியது. கோவை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்ததை கேக் வெட்டியும் படக்குழு கொண்டாடியுள்ளது. இப்படத்தின் தலைப்பு மற்றும் டீசர், டிரெய்லர் அடுத்தடுத்து வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    
அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in