பாதியில் நிறுத்தப்பட்ட 'லியோ' படப்பிடிப்பு: காரணம் இதுதான்!

'லியோ' படத்தில் நடிகர் விஜய்
'லியோ' படத்தில் நடிகர் விஜய்பாதியில் நிறுத்தப்பட்ட 'லியோ' படப்பிடிப்பு: காரணம் இதுதான்!

காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ‘லியோ’ படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

’பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா, கெளதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டப் பலர் இதில் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் கெளதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் ஆகியோரது போர்ஷனுக்கான படப்பிடிப்பு காஷ்மீரில் முடிந்தது. இந்த மாத இறுதிக்குள் ’லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் முடித்துவிட்டு அடுத்த மாதத்தில் இருந்து சென்னையில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், திடீரென்று எதிர்பாராத விதமாக காஷ்மீர் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று மிதமாக காஷ்மீர் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தை ‘லியோ’ படக்குழுவும் உணர்ந்து படப்பிடிப்பை உடனடியாக நிறுத்தியுள்ளனர். இதனை சந்திரமுகி படத்தில் நடிகர் வடிவேலு பயப்படும் காட்சியுடன் கூடிய வீடியோவுடன் தயாரிப்புத் தரப்பு சமூகவலைதளத்தில் பதிவிட்டு, தாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in