ஐஷ்வர்யா ரஜினி இயக்கும் `லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

’லால் சலாம்’
’லால் சலாம்’

‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணுவிஷால், விக்ராந்த் உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடக்க இருக்கிறது. இதற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் மற்றும் படப்பிடிப்பு தளங்கள் பார்ப்பது என பிஸியாக இருந்தார் ஐஷ்வர்யா. இடையில் நடிகர் விஷ்ணுவிஷாலும் இந்தப் படத்தில் இருந்து விலகுகிறார் என சொல்லப்பட்ட நிலையில், அது குறித்து எந்தவிதமான தகவலும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கியுள்ளது. ஸ்போர்ட்ஸ் ட்ராமாவை வைத்து குறிப்பாக, கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாக இருக்கும் இந்தப் படத்தில் இன்று விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைகிறார்கள். இதில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிட்டத்தட்ட 33 வருடங்களுக்குப் பிறகு நடிகை ஜீவிதா ராஜசேகரும் இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் கம்பேக் கொடுக்க இருக்கிறார். ’ஜெயிலர்’ படப்பிடிப்பு முடிந்ததும் விரைவில் ரஜினிகாந்த் இதன் படப்பிடிப்பில் இணைய இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in