கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்லை சுற்றும் 'சாரா' சர்ச்சை

சாரா அலிகானுடன் சுப்மான் கில்.
சாரா அலிகானுடன் சுப்மான் கில்.

கிரிக்கெட் வீரர் சுப்மான் கில், சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கரை விட்டு விட்டு நடிகை சாரா அலிகானுடன் டேட்டிங் செய்து வருவதாக ஒரு புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

கில், சாரா டெண்டுல்கர்
கில், சாரா டெண்டுல்கர்

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரை காதலித்து வருவதாக கூறப்பட்டது, இதனைக் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் விதமாகவும் இருவரது இன்ஸ்டாகிராம் பக்க பதிவுகள் இருந்தது. ஆனால், சில காரணங்களால் தற்போது இந்த ஜோடி பிரிந்துவிட்டது. இந்த நிலையில் சுப்மான் கில், நடிகை சாரா அலிகானுடன் ஒன்றாக டின்னர் டேட் செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

சைஃப் அலிகான் மற்றும் அம்ரிதா சிங்கின் மூத்த மகளான சாரா அலிகானும் ஏற்கெனவே கார்த்திக் ஆர்யனை காதலித்து வந்தர். சில காரணங்களால் இவர்கள் பிரிந்துவிட்டனர். தாங்கள் பிரிந்துவிட்ட செய்தியை 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் நடிகை சாரா அலிகான் தெரிவித்தார். இந்த நிலையில் சுப்மான் கில்லுடன் நடிகை சாரா அலிகான் இருக்கும் படத்தை கில்லின் நண்பர் குஷ்ப்ரீத் சிங் அவ்லாக் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதனால் சாராவும், கில்லும் காதலிப்பதாக தகவல் பரவியுள்ளது.

கடந்த செப்.8-ம் தேதி சுப்மான் கில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார், அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக குஷ்ப்ரீத் பதிவிட்ட இன்ஸ்டாகிராமில் ‘பகுத் சாரா பியார்’ என்கிற தலைப்பில் சில வரிகளை பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சுப்மான் கில் மற்றும் சாரா அலிகான் இருவரும் காதலித்து வருவதாக கருதினர், இந்த பதிவு வைரலானதும் கில்லின் நண்பர் குஷ்ப்ரீத், தனது இன்ஸ்டாகிராம் கணக்கை தனிப்பட்ட கணக்காக மாற்றிவிட்டார். ஆரம்பத்தில் சுப்மான் கில் மற்றும் சாரா அலிகான் இருவரும் ஹோட்டலில் இருந்த புகைப்படம் வைரலாக நிலையில் தற்போது இந்த பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in