
நடிகர் சிலம்பரசனின் ‘பத்துதல’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கக் கூடியத் திரைப்படம் ‘பத்துதல’. இந்த வருடம் டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இதன் வெளியீடு தள்ளிப் போனது. அடுத்த வருடம் ஜனவரியில் ‘வாரிசு’, ‘துணிவு’ ஆகிய திரைப்படங்கள் வெளியாவதல் பிப்ரவரி மாதம் வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்பட்டது.
தற்போது படம் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் அதாவது மார்ச் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகர் சிலம்பரசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புது வருடத்திற்கான வாழ்த்துகளைத் தெரிவித்து ‘பத்துதல’ திரைப்படம் மார்ச் 30-ம் தேதியில் இருந்து என்பதை மகிழ்ச்சியுடன் சிம்பு பகிர்ந்திருக்கிறார். காரின் மீது கருப்பு சட்டையில் சீரியஸாக சிம்பு அமர்ந்திருக்கும்படியான புது போஸ்டரையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.