பல்லாவரம் டு ஆஸ்திரேலியா: சாதிக்கத் துடிக்கும் சமந்தா!

பல்லாவரம் டு ஆஸ்திரேலியா:   சாதிக்கத் துடிக்கும் சமந்தா!
சமந்தா

2021-ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகையரில், தென்னகத்திலிருந்து ஒரே நட்சத்திரமாக இடம்பெற்றிருந்தார் சமந்தா. இந்த இணையத் தேடல்களுக்கு வழக்கமாய், ரசிகர்களின் ஆராதனைக்கும், ரசனைக்குமான காரணங்களே பின்னிருக்கும். ஆனால், சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கையும், அதிலிருந்து மீண்டு வருவதற்கான போராட்டங்களும், அப்போது அவர் உதிர்த்த முதிர்ச்சியான அனுபவக் கருத்துக்களுமே சமந்தா பற்றிய தேடலை அதிகரித்துள்ளன. தன் வாழ்க்கையில் அவர் கடந்துவந்த தேடல்களும், இதுவும் கடந்துபோகும் என்று உறுதியாக இருந்ததும், மீண்டு எழுந்ததுமே இந்த கட்டுரைக்கும் காரணமாகி இருக்கிறது.

‘பாணா காத்தாடி’யில் சமந்தா தோன்றியபோது, பக்கத்து வீட்டுப் பெண்ணின் சாயலுக்கு அப்பால், அப்படியொன்றும் அழகுப் பதுமையாக இல்லை. கௌதம் வாசுதேவ் மேனனின் படங்களுக்குப் பின்னர், நடிப்பிலும் பொலிவிலும் தேறியவராக, தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் கனவுக் கன்னியானார் சமந்தா.

அம்மா மலையாளம், அப்பா தெலுங்கு. ஆனபோதும் பல்லாவரத்தில் பிறந்த சமந்தா, அக்மார்க் தமிழ்ப் பெண்ணாகவே வளர்ந்தார். ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்ததில், ஆஸ்திரேலியாவில் சென்று செட்டிலாக வேண்டும் என்ற பேராவல், சிறுமி சமந்தாவிடம் குடிகொண்டது. அதற்கு வழக்கமான படிப்பு, பணிக்கு அப்பால் பெரிதாய் சம்பாதிக்க வேண்டும் என்றும் விளையாட்டாக முடிவெடுத்தார். விளைவு, மாடல் உலகின் வழியே சினிமா வாய்ப்புகள் மடியில் விழுந்தன. எடுத்த எடுப்பிலேயே தெலுங்கு, தமிழ் என இரு மொழிப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நாயகர்கள் வேறான போதும் இரு படங்களின் ஒரே நாயகியாக ஆரம்ப படங்களிலேயே அசத்த ஆரம்பித்தார் சமந்தா.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in