'திருமணம் எப்போது என்ற கேள்வி எரிச்சலூட்டுகிறது’: டென்ஷனான நடிகை அபர்ணா பாலமுரளி

'திருமணம் எப்போது என்ற கேள்வி எரிச்சலூட்டுகிறது’: டென்ஷனான நடிகை அபர்ணா பாலமுரளி

நடிகை அபர்ணா பாலமுரளி, சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பது, உடல் எடை அதிகரித்தது, எப்போது திருமணம், சமூக வலைதள நெகட்டிவ் விஷயங்கள் போன்றவை குறித்து யூடியூப் தளம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

உடல் எடை குறித்தும், எதிர்மறை விமர்சனங்கள் குறித்தும் அவர் பேசுகையி "சமூக வலை்தளங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு திரைக்குப் பின்னால் ஒருவரைப் பற்றி எதிர்மறையாக என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட முடியும். ஆனால், உண்மையில் சம்பந்தப்பட்ட நபர் என்ன அனுபவித்துக் கொண்டிருக்கிறார் அவரது சூழ்நிலை என்ன என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். இருந்தாலும் அதையெல்லாம் கடந்து இந்த எதிர்மறை விமர்சனங்களையும் உறுதியாக நின்று எதிர் கொள்ள வேண்டும்.

ஆனால், இதை போல எல்லோரும் இதை உறுதியாக எதிர் கொள்வார்கள் என்பது சொல்லி விட முடியாது. அதனால் ஒருவரை பற்றி விமர்சனம் வைக்கும் முன்பு அவர்கள் எப்படி எதனால் பாதிக்கப்படுவார்கள் என்ன நடந்தது என்பதை எல்லாம் முழுதாக தெரிந்து கொள்ளாமல் இது போன்ற பதிவுகளைப் பகிர்வதை தவிர்ப்பது நல்லது.

அதேபோல, சினிமாவில் நடிகைகள் உடல் எடை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது பற்றி எந்த கட்டாயமும் இல்லை. அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். இது பற்றிய அழுத்தம் கொடுக்காமல் இருக்க வேண்டும்" என்றார்.

மேலும், " பெரும்பாலும் பேட்டிகளில் நடிகைகளிடம் அவர்களது தொழில் சார்ந்த எப்போது கவர்ச்சியாக நடிக்க போகிறீர்கள், எந்த நடிகர்களுடன் நடிக்க விருப்பம், எப்போது திருமணம் இந்த கேள்விகளை வழக்கமாக கேட்பதை வைத்திருக்கிறார்கள். உண்மையில் இது போன்ற கேள்விகள் எரிச்சலூட்டுகின்றன.

எந்த ஒரு நடிகருடன் நடிப்பது மட்டுமே என்னுடைய விருப்பம் கிடையாது. சினிமாவில் பல திறமையான நடிகைகளும் இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து நடிக்கவும் எனக்கு ஆர்வம் உண்டு. இது போன்ற சினிமா துறையில் நாம் இருப்பதே முதலில் நமக்கு கிடைத்த ஆசிர்வாதம். உண்மையில், கூட நடிக்கும் நடிகர்கள் கூட 'நான் மிக பெரிய நடிகர்' என்ற ரீதியில் நடந்து கொள்ளாமல் சக நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மரியாதை கொடுக்கின்றனர்.

ஆனால், வெளியில் இருந்து பார்க்கும் மூன்றாவது நபர் தான் இது போன்ற வேறுபாடுகளை உருவாக்கும் விதமாக கேள்விகளை கேட்பார்கள். அனைத்து திறமையான நடிகர்களுடனும் திரையைப் பகிர்ந்து கொள்ள எனக்கு விருப்பம் உண்டு. மேலும், இங்கு நல்ல கலைஞர்களாக இருப்பதே முக்கியம் என கருதுகிறேன்" என பேசியுள்ளார் அபர்ணா.

சினிமாவில் வட இந்தியா சினிமா மற்றும் தென்னிந்திய சினிமா என்ற பாகுபாடு உண்மையில் இருக்கிறதா என்ற கேள்விக்கு, "அது ஒரு விவாதத்திற்காக மட்டுமே பேசுகிறார்கள். ரசிகர்களுக்கு நீங்கள் நல்ல படங்களைக் கொடுத்தால் நிச்சயம் அவர்கள் ரசிப்பார்கள்" என்கிறார் அபர்ணா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in