திருப்பதியில் தொடங்கும் `இந்தியன்2’ அடுத்த ஷெட்யூல்!

திருப்பதியில் தொடங்கும் `இந்தியன்2’ அடுத்த ஷெட்யூல்!

நடிகர் கமலின் ‘இந்தியன்2’ படப்பிடிப்பின் அடுத்த ஷெட்யூல் திருப்பதியில் தொடங்கி இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால் உள்ளிட்டப் பலரும் நடித்து வரக்கூடிய ‘இந்தியன்2’ திரைப்படத்தின் அடுத்த ஷெட்யூல் திருப்பதியில் இன்று தொடங்கி இருக்கிறது. சென்னையில் முடித்தப் பிறகு இன்று தொடங்கியுள்ள இந்த திருப்பதி ஷெட்யூலில் நடிகர் சித்தார்த் கலந்து கொண்டுள்ளார். படத்தின் பெரும்பாலான பகுதியின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், திருப்பதியில் நடக்கக்கூடிய இந்த ஷெட்யூல் இறுதிக்கட்டமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டப் பலர் இதில் நடிக்கின்றனர். கடந்த 1996-ல் வெளியான ‘இந்தியன்’ படத்தில் அப்பா- மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருப்பார் கமல். இதில் இந்தியன் தாத்தாவுடைய அப்பா வரை கதை செல்லும்படி ஃப்ளாஷ்பேக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in