ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் `ஜெயிலர்'

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் `ஜெயிலர்'

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் `ஜெயிலர்' என வைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கியவர் நெல்சன் திலிப்குமார். பீஸ்ட் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியில் அந்த அளவுக்கு பெரிதாக பேசப்படவில்லை. இதனால் தலைவர் 169 படம் பற்றிய வதந்திகள் சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியது. இருந்தாலும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், ரஜினி நடிக்க உள்ள புதிய படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதனிடையே, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 169 படம் குறித்து அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு `ஜெயிலர்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனுடன் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரஜினி நடிக்க இருக்கும் புதிய பட அறிவிப்பால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in