விஷாலின் ’லத்தி’ இசை அமைப்பாளர் மாற்றம்

விஷாலின் ’லத்தி’ இசை அமைப்பாளர் மாற்றம்

விஷால் நடிக்கும் ’லத்தி’ படத்தின் இசை அமைப்பாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

'வீரமே வாகை சூடும்' படத்துக்குப் பிறகு விஷால் நடிக்கும் படம் ’லத்தி’. அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகிறது. சுனேனா நாயகியாக நடிக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை நடிகர்கள் ரமணா, நந்தா இருவரும் தயாரிக்கின்றனர்

இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தபோது நடிகர் விஷாலுக்கு காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் விஷால் கேரளா சென்று ஓய்வு எடுத்துக்கொண்டு திரும்பினார். பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில் இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளார். இதில், முதலில் சாம் சி.எஸ் இசை அமைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் என்று படக்குழு அறிவித்துள்ளது. என்ன காரணத்துக்காக சாம் சி.எஸ். மாற்றப்பட்டார் என்பது தெரியவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in