சிம்பு கட் அவுட்டிற்கு சென்னையில் பால், புதுவையில் பீரால் அபிஷேகம்: வெளியானது 'வெந்து தணிந்தது காடு'

சிம்பு கட் அவுட்டிற்கு சென்னையில் பால், புதுவையில் பீரால் அபிஷேகம்: வெளியானது  'வெந்து தணிந்தது காடு'

பெரும் எதிர்பார்ப்புகள் மற்றும் தடைகளுக்கு இடையே அனைத்தையும் மீறி இன்று காலை வெளியாகி இருக்கிறது சிம்பு நடித்திருக்கும் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம்.

கௌதம்  வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படத்தில் நாயகியாக சித்தி இதானி நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தப் படம் இன்று காலை ஐந்து மணிக்கு  திரையரங்குகளில் வெளியானது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையின் அடிப்படையில் இத்திரைப்படம்   உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 500 திரையரங்குகளி ரிலீஸாகியிருக்கிறது.  நடிகர் சிம்பு  'மாநாடு' படத்திற்கு பிறகு  நடித்திருக்கும் படம் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.

இந்த படத்தின்  ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்த  நிலையில், படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.  ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தொடரப்பட்டிருந்த வழக்கில் திரைப்படம் ரிலீஸ் செய்வதற்கு தடை இல்லை என்று நீதிபதிகள் அறிவித்தனர்.  அந்த நிறுவனத்துடன் சமரசம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக கௌதம் வாசுதேவன் மேனனும்,  அதற்கு ஒத்துக் கொள்வதாக அந்த நிறுவனமும் தெரிவித்த நிலையில் வழக்கு சமரசமாக முடித்து வைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை திட்டமிட்டபடி திரைப்படம் வெளியானது. ஐந்து மணிக்கு ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.  சிம்பு ரசிகர்கள் ஆரவாரத்தோடும்,  உற்சாகத்தோடும் முதல்  காட்சியைப் பார்த்தனர்.  சென்னை ரோகினி திரையரங்கில் சிம்புவின் கட்டவுட்டிற்கு   பாலபிஷேகம் செய்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தை  தெரிவித்தனர். புதுச்சேரியில் திரைப்படம் வெளியான திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த சிம்பு கட் அவுட்க்கு பீர் ஊற்றி அபிஷேகம் செய்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகி இருக்கும் தங்கள் அபிமான நடிகரின் திரைப்படத்தை உற்சாகத்தோடு வரவேற்று கொண்டாடி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in