`சின்னக் கலைவாணர் விவேக்' சாலையை திறந்து வைத்தார் அமைச்சர்

`சின்னக் கலைவாணர் விவேக்' சாலையை திறந்து வைத்தார் அமைச்சர்

சென்னையில் மறைந்த நடிகர் விவேக் பெயரில் அமைக்கப்பட்டுள்ள சின்னக் கலைவாணர் விவேக் சாலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்துவைத்தார்.

முதல்வர் ஸ்டாலினை அண்மையில் மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி நேரில் சந்தித்தார். அப்போது, விவேக் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தார்.

அதன்பின், சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம்,'மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள் செல்வியின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் விவேக் வசித்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டி அரசாணை வெளியிட்டுள்ளார் என்று கூறினார். வரும் மே 3-ம் தேதி (இன்று) விவேக்கின் பெயர் கொண்ட தெருவின் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், சின்னக் கலைவாளர் விவேக் சாலை என்ற பெயர் பலகையை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் விவேக்கின் மனைவி, மகள் மற்றும் நடிகர் பூச்சி முருகன், விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in