கைவிரித்த உறவுகள்: பாரதிராஜாவின் மொத்த மருத்துவச் செலவை ஏற்ற முக்கிய‌ தலைவர்!

கைவிரித்த உறவுகள்: பாரதிராஜாவின் மொத்த மருத்துவச் செலவை ஏற்ற முக்கிய‌ தலைவர்!

இயக்குநர் பாரதிராஜாவின் மருத்துவச் செலவை ஏற்க குடும்பத்தினர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவரது மொத்த மருத்துவச் செலவையும் அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் ஏற்றுள்ளார்.

பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 23-ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூன்று நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இது தொடர்பாக பாரதிராஜா வெளியிட்டிருந்த அறிக்கையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன். மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. எனவே என்னை நேரில் காண வர வேண்டாம். பூரண நலம் பெற்று அனைவரையும் சந்திக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, பாரதிராஜாவுக்கு தொடர்ந்து ஐசியூவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்திருந்தது. இந்நிலையில், பாரதிராஜா உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். மருத்துவமனையில் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 14 நாட்கள் ஆகின்றன. இதனால், அவருக்கு மருத்துவச் செலவு அதிகரித்து வருகின்றன. இதனால், அவருக்கு மருத்துவச் செலவுக்கு பணம் கொடுக்க அவரது குடும்பத்தில் யாரும் முன் வரவில்லையாம். இதனை தெரிந்து கொண்ட புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தற்போது பாரதிராஜாவின் மொத்த மருத்துவச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார். இன்னும் சில நாட்களில் பாரதிராஜா வீடு திரும்பி விடுவார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் சினிமாவில் உடனடியாக நடிக்க அவருக்கு உடல்நிலை அனுமதிக்காது என்றும் 50 நாட்களாவது அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in