800க்கும் அதிகமான திரையரங்குகளில் 'தி லெஜண்ட்' ரிலீஸ்!

800க்கும் அதிகமான திரையரங்குகளில் 'தி லெஜண்ட்' ரிலீஸ்!

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் ஹீரோவாக நடிக்கும் `தி லெஜண்ட்' படம் 800க்கும் அதிகமான திரையரங்களில் வெளியாக இருக்கிறது.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கியுள்ளனர். இந்த படத்தின் மூலம் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் அவர் அறிமுகமாகியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஊர்வசி ரவுதலா, பிரபு, விஜயகுமார், நாசர், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். நடிகர் விவேக் நடித்துள்ள கடைசி படம் இது.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனிடையே, 'தி லெஜண்ட்' படத்தை தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக ஜி.என்.அன்புச்செழியன் வெளியிடுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in