விஜய்யுடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் த்ரிஷா?

விஜய்யுடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் த்ரிஷா?

நடிகர் விஜய்யுடன் த்ரிஷா பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் திரையில் மிகவும் ரசிக்கக்கூடிய இணைகளில் நடிகர் விஜய்- த்ரிஷாவும் எப்போதும் ரசிகர்களின் விருப்ப பட்டியலில் இருப்பார்கள். ’கில்லி’, ‘ஆதி’, ‘திருப்பாச்சி’ என பல வெற்றி படங்களில் இவர்கள் இணைந்து நடித்திருப்பார்கள். கடைசியாக இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் ‘குருவி’. அதற்கு பிறகு கடந்த பதினான்கு வருடங்களாக இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தன்னுடைய 66-வது படமான ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. சென்னை- ஹைதராபாத் என நடந்து வரும் படப்பிடிப்பை முடித்ததும் ‘தளபதி 67’ அறிவிப்பு வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் அவர் இணைய இருக்கிறார். இது குறித்தான அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் லோகேஷூம் தன்னுடைய சமீபத்திய பேட்டிகளில் கூறி இருந்தார். மேலும், அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலையில் பிஸியாக இருப்பதால் சமூக வலைதளங்களில் இருந்து கொஞ்ச காலம் விலகி இருப்பதாகவும் சொல்லி இருந்தார்.

இதுமட்டுமல்லாது, ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்கு பிறகு சமந்தா இந்த படத்தில் விஜய்க்கு வில்லியாக நடிப்பதாகவும் தகவல் வந்தது. இந்நிலையில், விஜய்க்கு கதாநாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ’குருவி’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து இருவரும் திரையில் இணைய இருக்கிறார்கள் என்ற செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in