உடல்நலக்குறைவால் சினிமாவுக்கு பிரேக் விடுகிறார் பிரபாஸ்? - தீயாய் பரவும் தகவல்!

நடிகர் பிரபாஸ்
நடிகர் பிரபாஸ்

உடல்நலக் குறைவால் நடிகர் பிரபாஸ் சினிமாவில் இருந்து சிறிது காலம் பிரேக் எடுக்கப் போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பிரபாஸ்...
நடிகர் பிரபாஸ்...

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் பிரபாஸ். ‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடர்ச்சியாக ‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சாஹே’ என பான் இந்தியா படங்களாக நடித்து வந்தார். இந்தப் படங்கள் அனைத்துமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியைத் தழுவியது. மேலும், பிரபாஸ் இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் எனவும் சில ரசிகர்கள் விமர்சனம் கொடுத்தனர். இருந்தாலும் அடுத்தடுத்து பான் இந்தியா கதைகளிலேயே விரும்பி ஒப்பந்தமானார் பிரபாஸ். சமீபத்தில் வெளியான அவரது ‘சலார்’ படமும் தோல்வியைத் தழுவியது.

'சலார்' படத்தில் பிரபாஸ்
'சலார்' படத்தில் பிரபாஸ்

இவர் தற்போது ‘கல்கி’ படத்தில் ஒப்பந்தமானார். இதில் தனக்கான போர்ஷனையும் பிரபாஸ் முடித்துள்ளார். இதற்கடுத்து, மாருதி இயக்கத்தில் ‘ராஜாசாப்’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'ஸ்பிரிட்' என்கிற படத்திலும் கமிட் ஆகி உள்ளார். மேலும், ‘சலார்2’ படமும் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில்தான், பிரபாஸ் சினிமாவுக்கு பிரேக் எடுக்கப் போகிறார் எனச் சொல்லப்படுகிறது. சமீபத்தில் பிரபாஸுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனால் ஏற்பட்ட வலி இன்னும் சரியாகாத நிலையில், அவர் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனாலேயே இந்த முடிவு எனவும் சொல்கின்றனர். விரைவில் பிரபாஸ் இதுகுறித்து உறுதிப்படுத்துவார் என சொல்லப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


பால ராமரை தரிசிக்க அயோத்திக்கு 6 நாட்கள் பாதயாத்திரை... 350 இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

அமைதிக்கான நோபல் பரிசு... 4வது முறையாக டொனால்ட் டிரம்ப் பெயர் பரிந்துரை!

அதிர்ச்சி... வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு!

உஷார்...அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இன்று முதல் சலுகைக் கட்டணத்தில் பயணம்...புதிய வசதியுடன் கிளாம்பாக்கம் பேருந்து முனையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in