சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து வெளியேறினார் மோகன்லால்... பதிலாக வருகிறார் சிவராஜ்குமார்!

 சிவகார்த்திகேயன் - மோகன்லால்
சிவகார்த்திகேயன் - மோகன்லால்

நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் நடிகர் மோகன்லால் நடிக்க இருப்பதாக அண்மையில் செய்தி வெளியானது. இப்போது அவர் தவிர்க்க முடியாத காரணத்தால் அந்தப் படத்தில் இருந்து விலகி இருப்பதால், அவருக்குப் பதிலாக நடிகர் சிவராஜ்குமார் இணைய இருக்கிறார்.

சிவகார்த்திகேயன், முருகதாஸ், அனிருத்
சிவகார்த்திகேயன், முருகதாஸ், அனிருத்

’அமரன்’ படப் பணிகளை முடித்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸூடன் தனது 23-வது படத்திற்காக இணைந்திருக்கிறார். இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை பார்க்காத சிவகார்த்திகேயனை இந்தப் படத்தில் பார்க்கலாம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

ஏ.ஆர். முருகதாஸின் ‘துப்பாக்கி’ படத்தின் முதல் நாள் படக்காட்சிக்கு டிக்கெட் கிடைத்துவிட்டது எனத் தொகுப்பாளராக இருந்த காலத்தில் ட்வீட் செய்து மகிழ்ந்த சிவகார்த்திகேயன், இப்போது ஹீரோவாக அவரது படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி இருந்தார்.

சிவராஜ்குமார்- சிவகார்த்திகேயன்
சிவராஜ்குமார்- சிவகார்த்திகேயன்

இந்த நிலையில், இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜமால் வில்லனாக களமிறங்கப் போவதாக சொல்லப்பட்டது. இதுமட்டுமல்லாது, இன்னொரு சர்ப்ரைஸாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என்றார்கள். ஆனால் இப்போது, தவிர்க்க முடியாத காரணத்தினால் நடிகர் மோகன்லால் படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.

அவருக்குப் பதிலாக கன்னட நடிகர் சிவராஜ் குமார் சிவகார்த்திகேயனுடன் இணைவார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு, சிவகார்த்திகேயன் சிவராஜ்குமாரின் 'வஜ்ரகயா’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு கேமியோவாக நடனம் ஆடியிருந்தார். அந்த நட்பின் அடிப்படையிலேயே சிவராஜ்குமாரிடம் பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறது படக்குழு. சிவராஜ்குமார் தமிழில் ரஜினியின் ‘ஜெயிலர்’, தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in