நடிகை ரிது வர்மாவுடன் காதலா?: வாரிசு நடிகர் சொன்ன பதில்!

நடிகை ரிது வர்மா
நடிகை ரிது வர்மா

வாரிசு நடிகருடன் நடிகை ரிது வர்மா காதலில் விழுந்துள்ளதாக செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட நடிகர் விளக்கம் கொடுத்துள்ளார்.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரிது வர்மா. இதன் பிறகு, விஷாவின் ’மார்க் ஆண்டனி’, நடிகர் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். படங்கள் மட்டுமல்லாது, சில வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார் ரிது வர்மா.

இந்த நிலையில் அவர் பிரபல வாரிசு நடிகருடன் காதலில் விழுந்திருப்பதாக வெளியானது. இதற்குச் சம்பந்தப் பட்ட நடிகர் விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 வைஷ்ணவ் தேஜ்,ரிது வர்மா
வைஷ்ணவ் தேஜ்,ரிது வர்மா

சமீபத்தில், தெலுங்கு நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதியின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் நடக்கவிருப்பதற்கு முன் நடிகர் அல்லு அர்ஜுன் திருமண ஜோடிக்கு விருந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் சிரஞ்சீவி குடும்பத்துடன் நடிகை ரிது வர்மாவும் கலந்து கொண்டுள்ளார். இதன் பிறகுதான் நடிகர் சிரஞ்சீவியின் குடும்பத்தைச் சேர்ந்த வைஷ்ணவ் தேஜை அவர் காதலிக்கிறார் என தகவல் வெளியானது.

திருமணவிழாவில்  பங்கேற்ற திரையுலகம்.
திருமணவிழாவில் பங்கேற்ற திரையுலகம்.

இதுகுறித்து நடிகர் வைஷ்ணவ் தேஜ் பேசியுள்ளார். அதில் ”அல்லு அர்ஜுன் கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் திருமண பெண் லாவண்யாவின் தோழியாக தான் ரிது வர்மா கலந்துகொண்டார். அதற்கு மேல் அதில் எதுவும் இல்லை. மற்றபடி நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்று வெளியான தகவல் அனைத்தும் உண்மை இல்லை” எனக் கூறி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!

துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!

1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!

ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?

பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in