கணவரை பிரிந்தாரா நடிகை ஷில்பா ஷெட்டி? ராஜ்குந்த்ரா ட்விட்டால் பரபரப்பு

ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ராவுடன்
ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ராவுடன்

நடிகை ஷில்பா ஷெட்டியை பிரிந்துவிட்டதாக அவரது கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "நாங்கள் பிரிந்துள்ளோம், இந்த கடினமான காலகட்டத்தில் எங்களுக்கான நேரத்தை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிட்டிருந்தார். நடிகை ஷில்பா ஷெட்டிக்கு, ராஜ் குந்த்ராவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

அந்த பதிவில் எந்த பெயரையும் அவர் குறிப்பிடாத காரணத்தால், இணையத்தில் பலரும் அவர் உண்மையில் தனது மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டாரா அல்லது காரணம் இருக்கிறதா என குழம்பி கேள்வி கேட்டு வருகின்றனர். ஷில்பா தனது சமூக வளைதளங்களில் இதுபோன்ற எதையும் பகிர்ந்து கொள்ளாத நிலையில், இது ரசிகர்களை குழப்பியது.

இந்நிலையில், ராஜ் நடிக்கும் அவரது முதல் படமான, UT69 டிரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. இதனால், இந்த பதிவும் அதை சார்ந்ததாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தை பலரும் எழுப்பியிருந்தனர். ஜூலை 2021ல் ஆபாசப் படங்கள் தொடர்பான வழக்கில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு மும்பையின் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் இரண்டு மாதங்கள் கழித்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்த வழக்கில் தான் சிக்கி வைக்கப்பட்டதாக எப்போதும் கூறி வரும் ராஜ், தனது பக்க கதையை இந்த படத்தின் மூலம் பகிர்ந்து கொள்வதாக கூறப்படுகிறது. UT69 நவம்பர் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படி பரபரப்பை கிளப்பிய அடுத்த சில மணி நேரத்தில் மற்றொரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ள ராஜ்குந்த்ரா, UT69 திரைப்படத்திற்காக பல முகமூடிகளை அணிந்ததாகவும், கடந்த 2 ஆண்டுகளாக தன்னுடன் பயணித்த அவற்றை பிரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அந்த ட்விட்டர்கள் பதிவுகள் அவரின் படத்திற்கான விளம்பரம் என்பது உறுதியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in