'தி கிரே மேன்’- ரியான் காஸ்லிங்,  கிறிஸ் ஈவான்ஸ்
'தி கிரே மேன்’- ரியான் காஸ்லிங், கிறிஸ் ஈவான்ஸ்

’தனுஷ் லுக்கை முதல்ல வெளியிடுங்க’

’தி கிரே மேன்’ படத்தின் முதல் கிளிம்ப்ஸ் இன்று வெளியிடப்பட்டதை அடுத்து, தனுஷின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

’அவெஞ்சர்ஸ்’ உட்பட சில ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் என்கிற ஜோ ரூஸோ மற்றும் அந்தோணி உருவாக்கும் படம் ’தி கிரே மேன்.’ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்காக அதிக பொருட்செலவில் உருவாக்கப்படும் இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் கிறிஸ் ஈவான்ஸ், ரியான் காஸ்லிங், அனா டெ அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் உட்பட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் தனுஷும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

 ரியான் காஸ்லிங், தனுஷ், கிறிஸ் ஈவான்ஸ்
ரியான் காஸ்லிங், தனுஷ், கிறிஸ் ஈவான்ஸ்

இதன் படப்பிடிப்புக்காக அவர் அமெரிக்கா சென்றுவந்தார். இப்போது இதன், படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், ஜூலை மாதம் வெளியிட நெட்பிளிக்ஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் கிளிம்ப்ஸ் இன்று சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரியான் காஸ்லிங், கிறிஸ் ஈவான்ஸ், அனா டெ அர்மாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் அதிரடியான சண்டைக் காட்சிகளுடன் இந்த கிளிம்பிஸ் ஆக்‌ஷனில் மிரட்டுகிறது.

இந்நிலையில், ட்விட்டரில் இந்த கிளிம்ப்சை கண்ட இந்திய ரசிகர்கள் பலர், ’முதல்ல தனுஷ் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுங்க’ என்று படக்குழுவுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in