'தி காட்ஃபாதர்’ நடிகர் காலமானார்

'தி காட்ஃபாதர்’ நடிகர் காலமானார்

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கான் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 82.

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கான் (James caan). புகழ்பெற்ற 'தி காட்ஃபாதர்' படத்தில் சன்னி கார்லியோனி (Sonny Corleone) என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் இவர் கேரக்டரும் பேசப்பட்டது. 'எல் டோராடோ' (El Dorado), 'பிரையன் சாங்', 'தி கேம்ப்ளர்', 'ஃபன்னி லேடி', 'மிசரி', 'தி யார்ட்ஸ்',' தி அவுட் சைடர்' உட்பட ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார்.

கடைசியாக, 'குயின் பீஸ்' என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த வருடம் வெளியானது. சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

கலிபோர்னியாவில் வசித்து வந்த ஜேம்ஸ் கான், கடந்த புதன்கிழமை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

‘ஜூலை 6-ம் தேதி ஜிம்மி காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். இக்கட்டான இந்த சூழ்நிலையில் எங்களின் தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். ஜேம்ஸ் கான் மறைவை அடுத்து ஹாலிவுட் திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in