மதுபானக் கூடத்தில் தகராறு: பிரபல நடிகர் கைது

மதுபானக் கூடத்தில் தகராறு: பிரபல நடிகர் கைது
எஜ்ரா மில்லர்

மதுபானக் கூடத்தில் தகராறில் ஈடுபட்டதாக பிரபல நடிகர் கைது செய்யப்பட்டார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் எஜ்ரா மில்லர். இவர், சிட்டி ஐலேண்ட், அனதர் ஹேப்பி டே, மேடம் போவரி, ஜஸ்டிஸ் லீம், ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது ’தி பிளாஷ்’ என்ற சூப்பர் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில், இவர் ஹவாய் தீவில் ஹிலோ என்ற பகுதிக்கு சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை, அங்குள்ள மதுபான கூடம் ஒன்றுக்குச் சென்றார். அங்கு சிலர் கரோக்கி பாடி கொண்டிருந்தனர். பலர் அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கத்தத் தொடங்கினார் எஜ்ரா மில்லர். அவரை அமைதிகாக்கும்படி ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

எஜ்ரா மில்லர்
எஜ்ரா மில்லர்

பின்னர் 23 வயது பெண் கரோக்கி பாடிக்கொண்டிருந்தபோது, வேகமாக சென்று அவரிடம் இருந்து மைக்கைப் பறித்து தகராறில் ஈடுபட்டார். பின் வட்டத்துக்குள் ஈட்டி எறிந்து (darts game) விளையாடிக் கொண்டிருந்த இன்னொரு இளைஞர் மீதும் பாய்ந்துள்ளார், மில்லர்.

இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து மில்லரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் 500 டாலர் பிணைத் தொகையின் அடிப்படையின் விடுவிக்கப்பட்டார். நடிகர் ஒருவர் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.