`வாரிசு’ படத்தில் விஜய் பாடிய பாடல் லீக்: படக்குழு அதிர்ச்சி!

`வாரிசு’ படத்தில் விஜய் பாடிய பாடல் லீக்: படக்குழு அதிர்ச்சி!

‘வாரிசு’ படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷ்யாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘வாரிசு’. படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வரக்கூடிய நிலையில், திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தில் ராஜூ தயாரிக்கிறார்.

பொதுவாகவே, தீபாவளி பொங்கல் போன்ற விடுமுறை நாட்களில் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த வருட தீபாவளிக்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தியின் ‘ப்ரின்ஸ்’, ‘சர்தார்’ ஆகிய படங்கள் வெளியாகின்றன. கடந்த 2019-ல் நடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. அடுத்து 2021-ல் ‘மாஸ்டர்’ பொங்கலுக்கும், இந்த வருடம் கோடை விடுமுறைக்கு ‘பீஸ்ட்’ திரைப்படமும் வெளியானது. இதனால், இந்த வருட தீபாவளிக்கு ‘வாரிசு’ படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்த முதல் பாடல்தான் தற்போது இணையத்தில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாலமாக, தன்னுடைய படங்களில் பெரும்பாலும் ஒரு பாடலாவது பாடிவிடும் வழக்கத்தை வைத்திருக்கும் விஜய் இந்தப் படத்திலும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். ‘ரஞ்சிதமே’ எனத் தொடங்கும் அந்தப் பாடலைத்தான் தீபாவளிக்கு முதல் பாடலாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கெனவே படத்தின் சில காட்சிகள், ஷூட்டிங் படங்கள் வெளியான நிலையில் பாடலும் தற்போது லீக் ஆகி உள்ளதால் படக்குழு அப்செட் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in