நடிகர் விஜய்யின் அசத்தல் நடனத்துடன் வெளியானது 'வாரிசு' முதல் சிங்கிள்

நடிகர் விஜய்யின் அசத்தல் நடனத்துடன் வெளியானது 'வாரிசு' முதல் சிங்கிள்

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும்' வாரிசு' படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகர் விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் . இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரித்துள்ளார் . எஸ் தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. சென்னை, விசாகப்பட்டினம், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் மற்ற பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இப்படம் பொங்கலுக்கு வெளியாவதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்தச் சூழலில் 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிள் புரோமோ நேற்று முன் தினம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், ' வாரிசு' படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகியிருக்கிறது. ‘கட்டுமல்லி கட்டி வச்சா’ என்று தொடங்கும் பாடலை விஜய் பாட பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார். பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். பாடலில் விஜய்யின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in