’ஆகாஷ் வாணி’-ரொமான்டிக் வகை வெப்சீரிஸ்!

’ஆகாஷ் வாணி’-ரொமான்டிக் வகை வெப்சீரிஸ்!

கிரைம் த்ரில்லர் வெப் தொடர்கள் அனைத்து ஓடிடி தளங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, அழகான காதல் கதையை வெப் தொடராக்கி இருக்கிறது ஆஹா தளம்.

கவின், ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகியுள்ள ’ஆகாஷ் வாணி’என்ற தொடர்தான் அது. இந்த இணைய தொடரின் ஃபர்ஸ்ட் லுக்-கை நடிகர் ஆர்யா வெளியிட்டார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் இயக்குநர் எனோக் ஏபிள், ’ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மகிழ்ச்சியான ரொமான்டிக் பயணம் என்பதை சொல்ல மட்டுமே. ஆனால் உண்மை அதுவல்ல’ என்று கூறுகிறார். ஒரு வெப் தொடரை ரோம்-காம் வடிவில் பரிசோதிப்பதில் ஆர்வமுடன் இருப்பதாகவும் கூறுகிறார்.

கவின், ரெபா மோனிகா ஜான்
கவின், ரெபா மோனிகா ஜான்

கவின், ரெபா மோனிகா ஜான் காதலர்களாக நடிக்கும் இந்த தொடரை, ஆஹா ஓடிடி தளம் வெளியிடுகிறது. ஷரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கடராமன், மேகி எனும் மார்கரெட், மெல்வின், ஜான்சன் மற்றும் கவிதாலயா கிருஷ்ணன் உட்பட பலர் நடிக்கின்றனர். ரமண கிரிவாசன் கிரியேட்டிவ் ஹெட்டாக பணிபுரிகிறார். சாந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். குணா பாலசுப்ரமணியம் இசையமைக்கிறார். கசுதுபா மீடியா (Kasutubha Mediaworks) நிறுவனம் சார்பில் சோனியா ராம்தாஸ் தயாரிக்கிறார்.

அவர் கூறும்போது, "ஆகாஷ் வாணி ரொமான்டிக் வகை வெப்சீரிஸ்களில் சிறந்ததாக இருக்கும். இளைஞர்களின் உலகை வசீகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கவின், ரெபா மோனிகா ஜான் ஜோடி சிறப்பாக நடித்திருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இந்த தொடர் இருக்கும்’என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in