`என் மகனுக்கு நான் காட்டும் முதல் படம் இதுதான்’- காஜல் அகர்வால் சொல்லும் பதில்

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்`என் மகனுக்கு நான் காட்டும் முதல் படம் இதுதான்’- காஜல் அகர்வால் சொல்லும் பதில்

`தன் மகன் நீல் கிச்சுலுவுக்கு காட்டும் முதல் படம் இதுதான்' என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் தற்போது தமிழில் ‘இந்தியன்2’ படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவான ‘கோஸ்டி’ திரைப்படம் இந்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில், ஊடகங்களுக்குப் பேட்டிக் கொடுத்துள்ளார். அதில், தன் மகன் நீல் கிச்சுலு எட்டு வயதாகும்போது தான் அவனை படம் பார்க்க அனுமதிப்பேன்' எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது, ‘கிச்சுலுவுக்கு என்னுடைய படங்களைத் தான் முதலில் காண்பிப்பேன். அதில் தமிழில் நான் நடித்தப் படங்களில் ‘துப்பாக்கி’ படத்தை முதலில் காட்ட விரும்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார் காஜல்.

கடந்த 2012-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், சத்யன் உள்ளிட்டப் பலரது நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்றத் திரைப்படம் ‘துப்பாக்கி’. இதன் இரண்டாம் பாகம் குறித்தான எதிர்பார்ப்பு இப்போது வரை ரசிகர்களிடையே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in