முதல் நாள் வசூலில் சாதித்தது துணிவா, வாரிசா?: வெளியானது புதுத் தகவல்

முதல் நாள் வசூலில் சாதித்தது துணிவா, வாரிசா?: வெளியானது புதுத் தகவல்

துணிவு, வாரிசு படங்கள் முதல் நாளில் எத்தனை கோடி வசூலானது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள 'துணிவு', நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' படங்கள் ஜனவரி 11-ம் தேதி அமர்க்களத்துடன் ரிலீஸானது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் படங்கள் வெளியாயின. அதே நேரத்தில் சென்னையில் நடந்த கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்தின் ரசிகர் பரத் என்ற இளைஞர் லாரியில் இருந்து குதித்தபோது முதுகுத்தண்டு உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், இரண்டு படங்களுக்கும் தமிழக அரசு சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இரண்டு படங்களின் டிக்கெட் 2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. திருச்சியில் டிக்கெட் விலை உயர்வை கண்டித்து ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். படங்கள் ரிலீஸாகி இன்றுடன் 13 நாட்கள் கடந்து விட்டது.

இந்த நிலையில், துணிவு, வாரிசு படங்கள் முதல் நாளில் எவ்வளவு கோடி வசூலானது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாளில் துணிவு படம் 21.60 கோடியும், வாரிசு படம் 20. 76 கோடி வசூலையும் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in