'பொன்னியின் செல்வன் 2' ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு

'பொன்னியின் செல்வன் 2' ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு


‘பொன்னியின் செல்வன்2’ படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டப் பலரும் நடித்திருந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் இந்த வருடம் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகி உலகம் முழுவதும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் ஐந்து பாகங்களை இரண்டு பாகங்களாக சினிமாவாக மாற்றினார் இயக்குநர் மணிரத்னம்.

இதில் முதல் பாகம் வெற்றியடைந்த நிலையில், அடுத்த பாகத்திற்கும் பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. அடுத்த வருடம் கோடை விடுமுறையை ஒட்டி படம் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், படம் அடுத்த வருடம் அதாவது 2023 ஏப்ரல் 28 அன்று வெளியாகும் என படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

’The Cholas Are Back’ என்ற பிரதான வரியுடன் நடிகர்கள் விக்ரம், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, ஐஷ்வர்யாராய் பச்சன் ஆகியோர் இருக்கும்படியான புதிய க்ளிம்ப்ஸ் வீடியோவுடன் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. இதனை அடுத்து ‘பொன்னியின் செல்வன்2’ திரைப்பட க்ளிம்ப்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த வீடியோவில் த்ரிஷாவை ஏன் காட்டவில்லை எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in