வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி நடித்துள்ள ‘விடுதலை’ படத்தின் பிசினஸ் தொடங்கியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய்சேதுபதி தன் போர்ஷனுக்கான டப்பிங் தொடங்கி இருப்பதை தெரிவித்திருந்தார். மேலும், இளையராஜா இசையில் ‘ஒன்னாட நடந்தா’ பாடல் தனுஷ் குரலில் வெளியாகி வரவேற்பையும் பெற்றது. விரைவில் படம் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் பிசினஸ் வெளியீட்டிற்கு முன்பே மிகப்பெரிய அளவில் விற்பனையாகி இருக்கிறது.
இதன் டிஜிட்டல் உரிமையை ஜி5 நிறுவனமும் சாட்டிலைட் உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சியும் மிகப்பெரிய தொகைக்கு பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது. இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் பவானிஸ்ரீ, கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில் படம் வெளியாகும் தேதி குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.