`இந்தியன்2’ படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை!

`இந்தியன்2’ படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை!

’இந்தியன்2’ படத்தில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை நடிக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டப் பலர் நடிக்கும் திரைப்படம் ‘இந்தியன்2’. கடந்த 2019-ல் தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படம் பின்பு கரோனா, படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்டப் பிரச்சினைகள் உள்ளிட்ட சில காரணங்களால் நடக்காமல் போனது. இப்போது மீண்டும் அதன் படப்பிடிப்புத் தொடங்கி நடந்து வருகிறது.

இதற்காக நடிகை காஜல் அகர்வால் கடுமையான களரி, குதிரயேற்றப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்போது இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜூம் நடிக்கிறார். இந்தத் தகவலை அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். ‘இந்தியன்2’ படத்திற்குத் தயாராகும் வகையில் ஒப்பனைப் போடும் புகைப்படத்தைப் பகிர்ந்து அவர் கூறியிருப்பதாவது, ‘கேமராவுக்குப் பின்னால் இருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் எனது பணிவான வணக்கம்.

எனக்கு இந்தப் படத்தில் ஒப்பனைச் செய்து என்னை மேலும் ஸ்மார்ட்டாகக் காண்பித்திருக்கும் ஒப்பனைக் கலைஞர்களுக்கு நன்றி. பஞ்சாபின் சிங்கம் தற்போது ’இந்தியன்2’ படத்தில் லெஜண்ட் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கத் தயாராகி வருகிறது’ என மகிழ்ச்சியுடன் இந்த செய்தியை பகிர்ந்து இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in