விபத்தில் சிக்கிய ‘அவெஞ்சர்ஸ்’ புகழ் நடிகர் கவலைக்கிடம்!

விபத்தில் சிக்கிய ‘அவெஞ்சர்ஸ்’ புகழ் நடிகர் கவலைக்கிடம்!

பிரபல அமெரிக்க நடிகரான ஜெர்மி ரெனர் விபத்தில் சிக்கியதில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் ஹாவ்க்-ஐ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அதிகம் பிரபலமானவர்.

அமெரிக்காவிலுள்ள ரோஸ்-ஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் புத்தாண்டு தினத்தன்று பனிப்புயல் ஒன்று தாக்கியது. இதனால் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன. இது தொடர்பான விவரம் அறியாமல், ரோஸ்-ஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு ஆக்டர் ஜெர்மி ரெனர் காரில் சென்றுள்ளார். அப்போது, கடும் குளிர் காற்றுடன் பனிப்பொழிவு கொட்டியதால், கட்டுப்பாட்டை இழந்த ரெனரின் கார் சாலையோரம் மோதி விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர், படுகாயமடைந்த ரெனரை மீட்டு, விமானம் மூலம் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நலம் குறித்து வெளியான மருத்துவ அறிக்கையில், ’விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஜெர்மி ரெனர் ஆபத்தான நிலையில் உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை சீராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மியின் குடும்பத்தினர் அவருடன் இருப்பதாகவும், சிறந்த சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அவர் விரைந்து குணம் பெற வேண்டும் என தங்களது பிரார்த்தனை குறித்து சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in