சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பை மறுத்த பிரபல நடிகை: அப்படி என்ன பிரச்சினை?

சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும்  வாய்ப்பை மறுத்த பிரபல நடிகை: அப்படி என்ன பிரச்சினை?

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகை பிரியங்கா மோகன் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த படம் வரும் ஜனவரி 2023-ம் ஆண்டு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நடிகர் ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை ஜெயிலர் தாஸ் பற்றிய கதை என்று சொல்லப்படுகிறது. ஆனால் படக்குழுவினரிடம் இதுகுறித்து எந்த மறுப்பும் வரவில்லை. இந்த படத்தில் முதலில் நடிக்க நடிகை பிரியங்கா மோகனையே படக்குழு அணுகியுள்ளது.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு இயக்குநர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான 'ஒந்து கதை ஹெல' என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.. அதே ஆண்டு 'கேங் லீடர்' படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.. இப்படம் தென்னிந்திய அளவில் மிக பெரிய வரவேற்பினை அவருக்குப் பெற்றுத் தந்தது.

இதையடுத்து தமிழில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் 'டாக்டர்' படத்தில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் 'டான்' படத்திலும் கதாநாயாகியாக நடித்தார். இந்த நிலையில் 'ஜெயிலர்' படத்தில் நடிக்க அவரை முதலில் படக்குழுவினர் அணுகியுள்ளனர். ஆனால் அவரோ, இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்குக் காரணம், பிரியங்கா மோகன் ஏற்கெனவே தமிழில் 'டான்', 'டாக்டர்' படங்களில் நடித்துள்ளார். அவரின் முதல் படமான டாக்டரில் நடித்த போது அவரை பற்றியும், படத்தின் இயக்குநரான நெல்சனைப் பற்றியும் பரவலாக வதந்திகள் வந்தன. அதனால் மீண்டும் நெல்சன் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்தால் இன்னும் கிசுகிசுக்கள் அதிகமாகி விடும் என்பதால் அப்படத்தல் பிரியங்கா மோகன் மறுத்து விட்டாராம். பிரியங்கா மோகன் நடிக்க வேண்டிய கேரக்டரில் தான் தமன்னா நடிப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in