பிரபல ஹாலிவுட் இயக்குநர் மரணம்... மனைவி உருக்கமான கண்ணீர்

இயக்குநர் வில்லியம் ஃப்ரைட்கின்
இயக்குநர் வில்லியம் ஃப்ரைட்கின்

`தி எக்ஸார்சிஸ்ட்' என்ற கிளாசிக் திரைப்படத்தின் இயக்குநர் வில்லியம் ஃப்ரைட்கின் காலமானார்.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் வில்லியம் ஃப்ரைட்கின். இவரது மனைவி ஷெர்ரி. வில்லியம் சமீப காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இல்லத்தில் ஃப்ரைட்கின் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவரது மனைவி ஷெர்ரி லான்சிங் கூறுகையில், "அவர் ஒரு அற்புதமான வாழ்க்கை வாழ்ந்தார். அவருக்கு கிட்டத்தட்ட 88 வயது. அவரது ஒரு புதிய படம் வெளிவர உள்ளது. அவர் உலகின் மிக அற்புதமான கணவர். அவர் உலகின் மிக அற்புதமான தந்தை. அவருக்கு ஒரு பெரிய அற்புதமான, வாழ்க்கை இருந்தது. நிறைவேறாத கனவு இல்லை" என்றார் உருக்கமாக.

சிறந்த இயக்குநர் உட்பட 5 அகாடமி விருதுகளை வென்ற வில்லியம் ஃப்ரைட்கின், த்ரில்லர் தி ஃபிரெஞ்ச் கனெக்சன் என்ற படம் ஆஸ்கர் விருதை பெற்றுத் தந்தது. 1973ல் உலகளவில் பேய் படங்களுக்கென தனி அடையாளத்தை பெற்றுத் தந்த படம் தி எக்ஸார்சிஸ்ட் (The Exorcist) என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

வில்லியம் ஃப்ரைட்கின் மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in