`விடுதலை' படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்!

`விடுதலை' படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்!

'விடுதலை' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக் கூடிய திரைப்படம் 'விடுதலை'. எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் டப்பிங் பணிகள் தற்போது ஆரம்பித்திருப்பதை படங்கள் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். விஜய்சேதுபதி வாத்தியார் கதாபாத்திரத்திலும் சூரி கதையின் நாயகனாகவும் நடிக்கிறார். மேலும், பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டப் பலரும் இதில் நடித்திருக்கின்றனர். போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in